மாடு சுழிகளும் குணங்களும்
மாடுகளுக்கு நன்மை தரும் சுழிகள்:
1.கோபுர சுழி: திமிலின் மேலும் திமிலின் முன்புறத்தில் அல்லது டீமில் மற்றும் முதுகு சேருமிடத்தில் இருப்பது கோபுர சுழியாகும், இதை ராஜா சுழி என்றும் கூறுவர். இந்த சூலி உள்ள மாட்டை உடையோர் மிகுந்த செல்வத்துடன் வாழ்வர்.
2.லட்சுமி சுழி, கழுத்தின் ஒரு பக்கத்தில் கொஞ்சம் தள்ளி இருப்பது லட்சுமி சுழியாகும், இந்த சூலி உள்ள மாடு மிகவும் அதிர்ஷ்டம் கொடுக்க கூடியது. அனால் இந்த சூலி உள்ள மாடு கிடைப்பது அரிது.
3.தாமணி சுழி, தாமணி சுழி என்பது, மடை இணைக்கும் கயிறு அல்லது தாமணி எனப்படும் நடுமுதுதண்டின் நீளமான ஒரு கோடு கோட்டின் இரு இருபுறமும் இரு சுழிகள் இருந்தால் தாமணி சுழி எனப்படும். அல்லது முன்னககால்களுக்கு கழுத்துக்கும் இடையில் அவை டாடியின் இருபுறங்களிலும் இருக்கலாம். இந்த சூலி உள்ள மாட்டை வாங்குபவர்கள் மேலும் ஏராளமான மாடுகளை வாகக்கூடும் என்று நம்பப்படுகிறது.
4.வரி சுழி, முதுகுத்தண்டின் இடது பக்கத்தில் மட்டும் இருக்கும் சுழி வரி சுழி. இதை வாங்குபவர் நல்ல நமைகளை அடைவர் என்பது நம்பிக்கை.
5.இரட்டை கவர் சுழி, முன்னங்கால் முட்டியின் இருபக்கத்திலும் இரண்டு பிளவு போல் இருப்பது இரட்டை கவர் சுழியாகும். இரண்டு பிளவு இல்லாமல், ஒரு பக்கத்தில் மட்டும் பிளவு இருந்தால் வீட்டில் இருக்கும் அனைத்து மாடுகளும் அழிவதோடு, மாட்டுக்கு சொந்தக்காரருக்கு துன்பம் உண்டாகும்,
6.பாசிங் சுழி, இரு கண்களுக்கு மேல் நெற்றியில் இருக்கும் சுழி இரட்டையாய் இருந்தால் அது பாசிங் சுழி, ஜோடி சுழி எனப்படுகிறது. இந்த சூலி உள்ள மாடு உள்ளவருக்கு கல்யாணம் விரைவில் நடைபெறும், மனைவியை இழந்தவருக்கு மருமணமாக வாய்ப்புகள் அமையும் என்பது நம்பிக்கை.
7.ஏறு பூரான்சுழி, முதுகின் மத்தியில் பூரண போன்று மயிர் பிளவு இருக்கும், இந்த சுழி முன்பக்கமாக வந்து முடிந்தால் அது ஏறு பூரான்சுழி எனப்படும். இந்த சுழி உள்ள மாடு இருந்தால் நல்ல அதிர்ஷ்டம் தரும் என்று நம்ப படுகிறது
8.விபூதி சுழி, இரு கண்களுக்கும் நடுவில் இரண்டு சுழிகள் இரு புருவக்கோடுகளின் கிழிக்கும். இத சுழி உள்ள மாடுகளை வைத்திருப்பவருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
9.கொம்புதானா சுழி, இந்த சூலி கொம்புகளின் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும். இந்த சூலி உள்ள மாடு இருந்தால், மந்தையில் உள்ள அணைத்து மாடுகளுக்கும் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும்
மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று நம்பப்படுகிறது.
10.ஏறுநாகசுழி, வாலின் மேல்பக்கம் முதுகு நோக்கி தொடைத்து செல்லும் சுழி ஏறுநாகசுழி என்று கூறப்படுகிறது, இந்த சூலி உள்ள மட்டை வாங்குபவர்களுக்கு நன்மை பயக்கும் அல்லது மங்கள உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
11.நீர் சுழி, மூத்திர துவாரத்திற் பக்கத்தில் காளை மாடுகளுக்கு இருக்கும் சுழி நீர் சுழி. இதை நல்ல சூலி என்றும் இதை கெட்ட சுழி என்றும் சொல்லமுடியாது.
நாட்டு மாடு சுழி பார்த்து வாங்குவது எப்படி
மாடுகளுக்கு தீமை தரும் சுழிகள்
12.முக்கண் சுழி அக்கினி சுழி, இரு கண்களுக்கும் நடுவில் முக்கோண வடிவில் காணப்படும் இத சூலி முக்கண் சூலி எனப்படும். இந்த சூலி உள்ள மாடு உள்ள குடும்பத்தில் பல இடையூறுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
13.குடைமேல் குடை சுழி, நெற்றியில் ஒரு சுழியின் மீது மற்றொரு சுழி இருக்கும், இதை குடைமேல் குடை சுழி என்று கூறுவர். இந்த சூலி உள்ள மாடு குடை மேல் குடை அல்லது இடி மேல் இடி என்பதுபோல் தீமை பயக்கும் சுழி யாக கருதப்படுகிறது.
14.விலங்கு சுழி,
முன்னங்கால் அல்லது பின்னங்கால், பின்புறமோ அல்லது கணுக்காலிலோ கழித்து இருந்தால் விலங்கு காழி என்று கூறுவர். இந்த சூலி உள்ள மட்டை வாங்குபவர், விலங்கிடப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது நம்பிக்கை.
15.பாடை சுழி,
மாடுகளின் முதுகின் பின்பகுதியில், வாளின் முன்பக்கம் அல்லது பின்பக்கமாக காணப்படுவது படை சுழி ஆகும். இத சுழி மிகவும் ஆபத்தாக கருத படுகிறது.
16.பெண்டிழந்தான் சுழி,
வலின் உட்பக்கம் மலத்துவாரத்திற்கு நடுவில் ஒன்று அல்லது இரண்டு சுழிகள் இருக்கும். இதற்கு பெண்டிழந்தான் சுழி என்று பெயர். இது சுழி உள்ள மட்டை வைத்துஇருபவருக்கு, ஆபத்துகள் உண்டாகும் என்பது நம்பிக்கை.
17.நாகப்பட சுழி,
கருதப்படுகின்றது
18.தட்டு ச் சுழி
19.துடைப்பை சுழி
20.புட்டானிச் சுழி
21.பாடைக்கட்டு சுழி
22.எச்சுப்பள்ளி
23.இறங்கு பூரான்சுழி,
24.பூரண கெளவல் சுழி
25.வால் முடங்கிசுழி
26.இறங்கு நாக சுழி
27.கருநாக சுழி
28.மென்னிப்பிடி சுழி
Leave a Comment